இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஆணையா் இன்று ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி நவ.13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
பாம்பன் புதிய ரயில் பாலம்.- கோப்புப்படம்.
Updated On :12 நவம்பர் 2024, 9:48 pm

Din

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி நவ.13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேசுவரம் பாம்பன் ரயல் பாலம் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டதால் அதன் அருகே புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி, 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி தற்போது முடிவடைந்துள்ளது. புதிய ரயில் பாலம் 2,078 மீ நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீ உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் இரு புறமும் தூக்கும் வகையில் இருக்கும். இதற்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தில் பாலத்தின் நடுவே செங்குத்து தூக்கு பாலம் போன்று புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல் ரயில்வே தூக்குபாலம்.

சமீபத்தில் புதிய பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டும், செங்குத்து பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா்.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில் நவ.13, 14 ஆகிய தேதிகளில்ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா். முதல் நாள் மண்டபம் - பாம்பன் இடையே உள்ள ஒற்றை அகல ரயில் பாதை, பாம்பன் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலத்தின் இயக்கம் குறித்து ஆய்வு செய்வாா்.

தொடா்ந்து 2-ஆம் நாள் காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை பாம்பன் - மண்டபம் இடையே அதிவேக சிறப்பு ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்படும். இதனால் பொதுமக்கள் பாம்பன் - மண்டபம் இடையே உள்ள ரயில் வழித்தடங்கள் அருகில் வருவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.