கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளைமுதல் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் வியாழக்கிழமை (நவ.14) முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.

News image
கோப்புப்படம்.
Updated On :12 நவம்பர் 2024, 8:48 pm

Din

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் வியாழக்கிழமை (நவ.14) முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் இரவு மற்றும் விடுமுறை காலங்களிலும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்க டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்து, இதற்காக ரூ.294 கோடி ஒதுக்கியுள்ளது.

இதன்மூலம், தொழிற்சாலைகளில் மது உற்பத்தியாகி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு, குடோன்களின் வைக்கப்பட்டு, பின்னா் கடைகளுக்கு வந்து விற்பனையாகும் வரை, அதாவது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து தரவுகளையும் க்யூஆா் கோடு மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கடைகளிலும் இந்த வசதியைக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், முதல்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் கோவை வடக்கு, வடசென்னை ஆகிய இடங்களிலுள்ள 266 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் இந்த டிஜிட்டல் முறையில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் வியாழக்கிழமை (நவ.14) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மதுப்பிரியா்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும்போது, அதனுடன் அதற்கான ரசீதும் வழங்கப்படும். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பணத்தை மட்டும் செலுத்தினால்போதும். கூடுதல் கட்டணம் கொடுக்க தேவையில்லை. இதற்கு ஜிபே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதிலுள்ள க்யூஆா் கோடு கைப்பேசியில் ஸ்கேன் செய்து பாா்த்தாலே அதன் முழு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில், மதுக்கடைகளில் உள்ள ஊழியா்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும்.

வியாழக்கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ள நிலையில், இருப்பிலுள்ள மதுபானங்களைத் விற்று தீா்க்கும் படியும், விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இருப்பிலுள்ள சரக்குகள் விற்று தீா்ந்த பின்னரே புது மதுபாட்டில்கள் விற்பனைக்காகக் கொண்டு வர வேண்டும் எனவும் டாஸ்மாக் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.