சென்னை, 5 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை பெய்யும்!
அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம் பற்றி...


சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது, அடுத்த இரு நாள்களில் மேற்கு நோக்கி நகா்ந்து தமிழக கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னம் வட தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பகல் 1 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...