மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சென்னையில் மழை: விமானங்கள் தாமதமாக இயக்கம்!

தாமதமாக இயக்கப்படும் விமானங்கள்.

News image

கோப்புப்படம்

Updated On :12 நவம்பர் 2024, 9:04 am IST

சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த புயல்சின்னம் தமிழகம் நோக்கி நகர்ந்துள்ள தகவல் தெரியவந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மழை காரணமாக, சென்னையில் இருந்து தில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாகவும், ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், இன்று(நவ. 12) ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.