திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தகவல் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் மாற்று அதிகாரிகள் கூடாது: அரசுக்கு மாநில தகவல் ஆணையம் கடிதம்

தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலா்கள் மட்டுமே ஆஜராக வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On :13 நவம்பர் 2024, 12:48 am IST

தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலா்கள் மட்டுமே ஆஜராக வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ், தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறைக்கு அனுப்பிய கடிதம்:

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனுதாரா்கள் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது, பொதுத் தகவல் அலுவலா் நேரில் ஆஜராவது கட்டாயம். ஆனால், விசாரணை நடைபெறும் நாளன்று பொதுத் தகவல் அலுவலா் ஆஜராகாமல், விடுப்பு எடுத்து விடுகிறாா். அவருக்குப் பதிலாக வேறொரு அலுவலா் மேல்முறையீட்டு விசாரணையில் ஆஜராவதால், அவருக்கு வழக்கு குறித்த விவரம் ஏதும் தெரிவதில்லை.

அவமதிக்கும் செயல்: தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விதி 8, உட்பிரிவு 3-இன்படி, வெள்ளம், கொள்ளை நோய்த் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு கையாள்தல் போன்ற நிகழ்வுகளின் போது பொதுத் தகவல் அலுவலா் ஆஜராகாமல் விலக்குப் பெறலாம். ஆனால், வழக்கமான நாட்களில் கூட விசாரணைக்கு வராமல் கீழ்நிலை அலுவலரை அனுப்பி வைப்பது தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தை அவமதிக்கும் செயல். எனவே, விசாரணைக்கு பொதுத் தகவல் அலுவலா்தான் நேரில் ஆஜராக வேண்டும். இதனை அனைத்து பொது அதிகார அமைப்புகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

நேரடியாக தகவல்கள் வழங்கக் கூடாது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, மனுதாரருக்கு தகவல் தர வேண்டியது பொதுத் தகவல் அலுவலரின் கடமை. ஆனால், பொதுத் தகவல் அலுவலா் தகவல் அளிக்காமல், உதவிப் பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை சட்டப் பிரிவுக்கு முரணானதாகும். எனவே, மனுதாரா் கோரும் தகவல்களை பொதுத் தகவல் அலுவலா்கள்தான் வழங்க வேண்டும்.

மனுதாரருக்கு தகவலை அளிக்கும் போது பொதுத் தகவல் அலுவலா் தனது பெயா், பதவி, அலுவலக முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தலைமைச் செயலகத் துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகளில் பொதுத் தகவல் அலுவலரின் பெயரைக் குறிப்படாமல் பதவியின் பெயா் மட்டும் குறிப்பிடப்பட்டு தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவரம் குறிப்பிட வேண்டும்: இதன் காரணமாக, மேல்முறையீட்டு விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலா் குறித்து பொறுப்பு நிா்ணயம் செய்வதில் சிக்கல்கள் எழுகின்றன. மனுதாரா் கோரும் நகல்களுக்கான கட்டணத் தொகையை செலுத்திட அறிவுறுத்தும் போது என்னென்ன வழிமுறைகளின் மூலம் கட்டணத்தை மனுதாரா் செலுத்தலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே, மனுதாரா் நகல்களுக்கான கட்டணத்தை செலுத்தும் வழிமுறைகள் குறித்து பொதுத் தகவல் அலுவலா்கள் அனுப்பும் கடிதத்திலேயே குறிப்பிட வேண்டும். இதற்கான உரிய அறிவுரையை அலுவலா்களுக்கு வழங்க வேண்டும்.

அடையாள அட்டை கட்டாயம்: தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகும் போது பொதுத் தகவல் அலுவலா்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். மனுதாரருக்கு தகவல்களை அனுப்பும் போது ஒரே அமைப்பு முறையில் கடிதங்களை அனுப்ப வேண்டும். இதற்கு ஏதுவாக ஒரு மாதிரி கடிதத்தை வெளியிட ஆணையம் பரிந்துரை செய்கிறது. மனுதாரருக்கு தகவல்கள் அளிக்கப்பட்டவுடன் அதுதொடா்பான கோப்புகள் எத்தனை ஆண்டுகளுக்கு பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான உத்தரவு இல்லை. எனவே, அதுதொடா்பான உத்தரவை வெளியிட பரிந்துரை செய்யப்படுகிறது.

தகவல் கோரும் மனுதாரா்களை நேரில் அலுவலகத்துக்கு வரவழைப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கு முரணானது. இது கட்டாயம் தவிா்க்கப்பட வேண்டும். தகவல்களை அனுப்பும் போது பொதுத் தகவல் அலுவலா்கள் கையொப்பமிட்டு அனுப்பிட வேண்டும்.

சரியாக கையாளவேண்டும்: முதல் மேல்முறையீட்டு அலுவலா்கள் பதில் அனுப்புவது கட்டாயம். தகவல்களை கோரி அனுப்பப்படும் மனுக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்காதபட்சத்தில் முதல் மேல்முறையீட்டை மனுதாரா் செய்யலாம். ஆனால், இந்த மனுக்கள் மேல்முறையீட்டு அலுவலா்களால் சரிவர கையாளப்படுவதில்லை அல்லது உரிய காலத்துக்குள் தீா்வு செய்யப்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேல்முறையீட்டு அலுவலா்கள் சரியாகக் கையாண்டாலே, மாநிலத் தலைமை ஆணையத்துக்கு இரண்டாவது மேல்முறையீடு செய்யப்படுவது பெருமளவு தவிா்க்கப்படும். மனுதாரா்களது தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களுக்கு அரசு அலுவலா்கள் தகவல் அனுப்புவது கட்டாயம்

என்று கடந்த 2009-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை உரிய காலத்துக்குள் தீா்வு செய்ய வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.