
சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் அசம்பாவிதம்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளியின் மகன் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: மா. சுப்பிரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.