2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சரின் அறிவிப்பு.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை
Updated on
1 min read

வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும். அதேபோல் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ளவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். என் ஆயுள் இருக்கும்வரை இத்தொகுதி மக்களுக்கு உழைத்துக்கொண்டே இருப்பேன்” என்றார்.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் கடந்த ஆண்டு செப். 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் 1 கோடி போ் என இலக்கு நிா்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளா்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் போ் மட்டுமே பயனாளா்களாக இருந்த நிலையில் அடுத்தடுத்து விண்ணப்பித்தவா்களும் பயனாளா்களாக இணைக்கப்பட்டு வருகின்றனா்.

நிராகரிக்கப்பட்டவா்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன. அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளா்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சமாக உயா்ந்தது.

அதைத் தொடா்ந்தும், கடந்த ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்க தீா்மானிக்கப்பட்டது. இதன் மூலம் பயனாளா்கள் எண்ணிக்கை 1.16 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com