விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவையில் துக்க வீட்டில் தீவிபத்து.. ஒருவர் பலி; மூவர் படுகாயம்!

கோவையில் துக்க வீட்டில் தீவிபத்து நேரிட்டதில்ஒருவர் பலியானார் மூவர் படுகாயம்!

News image

துக்க வீட்டில் துயரம்

Updated On :15 நவம்பர் 2024, 9:38 am

கோவையில் துக்க வீட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உறவினர் ஒருவர் பலியான நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85) இவர் கடந்த சில நாள்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ராமலட்சுமி நேற்று உயிரிழந்தார். இன்று அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு இறந்த ராமலட்சுமி உடலை ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் வீட்டில் வைத்திருந்தனர்.

இன்று காலை துக்க நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு ஏராளமான பேர் வந்திருந்து ராமலட்சுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தனர். அப்பகுதியில் காலை 10:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரீசர் பாக்ஸ் செயல்படாது என்பதால் உடனே ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு புகைமண்டலம் ஏற்பட்டது. ராமலட்சுமி உடல் இருந்த அறையில் உறவினர்கள் பத்மாவதி, பானுமதி, ஶ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் சிக்கிக்கொண்டனர். உள்ளே தீக்காயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே சிகிச்சை பலனளிக்காமல் பத்மாவதி (55) என்பவர் இறந்தார். மற்ற மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள் தீயில் சிக்கி உயிரிழந்ததும், படுகாயம் அடைந்ததும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.