ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
நடிகை கஸ்தூரி- கோப்புப்படம்.
Updated On :16 நவம்பர் 2024, 3:05 pm

DIN

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை கைது செய்தது. சாலை மார்க்கமாக நடிகை கஸ்தூரி நாளை காலை சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடா்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரரின் பேச்சில் வெறுப்புணா்வு உள்ளதால், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.