சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'அமரன்' படம்: நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2024, 6:00 am

DIN

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை திரையரங்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திரையரங்க வளாகத்திற்குள் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் திரையரங்கில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படத்தில் குறிப்பிட்ட மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக சில மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் போலீஸ் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.