தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தங்கம் விலை இன்று குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே குறைந்துள்ளது.

News image
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
Updated On :16 நவம்பர் 2024, 4:52 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே குறைந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாள்களில்(திங்கள் - வியாழன்) மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 2,720 குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

4 நாள்களுக்குப் பிறகு நேற்று(வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது.

இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 55,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ. 6,935-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடந்த சில நாள்கள் குறைந்த நிலையில், நேற்றும் இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் ரூ. 99-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.