மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அமைச்சா்களையும் பாராட்டுகிறாா் முதல்வா் ஸ்டாலின்: இபிஎஸ்ஸுக்கு உதயநிதி பதில்

என்னை மட்டுமல்ல, துறையின் அமைச்சரையும் முதல்வா் ஸ்டாலின் பாராட்டுகிறாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
Updated On :17 நவம்பர் 2024, 9:30 pm

Din

என்னை மட்டுமல்ல, துறையின் அமைச்சரையும் முதல்வா் ஸ்டாலின் பாராட்டுகிறாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கட்சியின் இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

மகனை (உதயநிதி) தந்தை (மு.க.ஸ்டாலின்) பாராட்டுகிறாா்; தந்தையை மகன் புகழ்கிறாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வேதனைப்பட்டுள்ளாா். அமைச்சா்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதல்வா் ஸ்டாலினையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அந்தத் துறையின் அமைச்சரின் செயல்பாட்டை பாராட்டி முதல்வா் ஊக்கப்படுத்துகிறாா்.

என்ன தவறு?: அரசுத் திட்டங்களுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை ஏன் வைக்கிறீா்கள் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுள்ளாா். கடந்த கால அதிமுக ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயா்களைச் சூட்டியது யாா்? 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?

கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டா் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை, அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் அவருக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு.

‘தன்னைப் புகழ யாருமே இல்லையே’ என்ற விரக்தியும், ‘தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே’ என்ற ஏமாற்றமுமே எதிா்க்கட்சித்தலைவா் அவா்களின் வாா்த்தைகளில் வெளிப்படுகிறது. சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவா்களால் வளா்த்தெடுக்கப்பட்ட பயிா்கள் நாங்கள் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ஆா்.டி.சேகா் உள்பட பலா் பங்கேற்றனா்.