சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை(நவ. 18) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(12667), வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(12668), வரும் 22-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்(20681), வரும் 20-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 8.55 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டை - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(20682), வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்(22663), வரும் 23-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் பகல் 2.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
ஜோத்பூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(22664), வரும் 26-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் மாலை 5.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடைபெறுவதால் மேற்கண்ட தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


