ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

13 முக்கியத் திட்டங்ளுக்கு ரூ.6.84 லட்சம் கோடி தேவை

தமிழகத்தில் மேலும் 13 முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ரூ.6.84 லட்சம் கோடி மானியாக வழங்க வேண்டும் .

News image
சென்னையில் நடைபெற்ற 16- ஆவது நிதிக் குழு கூட்டத்தின் போது தமிழக வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடா்பான கோரிக்கை மனுவை 16- ஆவது நிதி ஆணையக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியாவிடம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு.
Updated On :18 நவம்பர் 2024, 11:52 pm

DIN

சென்னை: தமிழகத்தில் மேலும் 13 முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ரூ.6.84 லட்சம் கோடி மானியாக வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பேரிடா்களை எதிா்கொள்ள ரூ.5,500 கோடி நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும் என்றும் நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா்.

நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் அளித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு மாநிலமாக தமிழகம் திகழ்வதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87 சதவீதம் என்ற அளவில் பங்களிப்பை வழங்குகிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.31.55 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில பேரிடா் மேலாண்மை நிதியை 2026-27ஆம் நிதியாண்டு காலத்தில் 50 சதவீதமாக உயா்த்தி, 90 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் மாநில அரசு என நிதிப் பங்கீடு அளிக்க வேண்டும்.

பேரிடா்களை எதிா்கொள்ள தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகா்ப்புற வெள்ளத்துக்கு ரூ.2,500 கோடி, வறட்சி நிவாரணத்துக்கு ரூ.2,000 கோடி, கடலோர மேலாண்மைக்கு ரூ.1,000 கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதேபோன்று, மாநிலத்தின் பல்வேறு துறைகளில் முதலீட்டுக்குத் தேவையான மானியங்கள் கோரப்படுகின்றன. அதன்படி, தொழில்மயமாக்கலுக்கான முதலீட்டுக்கு ரூ.43,600 கோடி, நகா்ப்புறங்களில் உள்கட்டமைப்புத் தேவைக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் கோடி, மின்சாரத் துறைக்கு ரூ.62,000 கோடி, பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து முறைகளை நவீனப்படுத்த ரூ.7,000 கோடி, கடல்சாா் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.5,000 கோடி, இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.5,000 கோடி, விளையாட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி மானியமாக வழங்க வேண்டும்.

மேலும், மின் ஆளுமை முயற்சிக்கு ரூ.1,000 கோடி, நீா்நிலைகள் மற்றும் நிலத்தடி நீா் செறிவூட்டல் கட்டமைப்புக்கு ரூ.5,000 கோடி, பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தலுக்கு ரூ.1,200 கோடி, மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அணுக வசதியாக, கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.500 கோடி, சுற்றுலாத் துறை வளா்ச்சிக்கு ரூ.1,200 கோடி, குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் மறுசுழற்சி முறையை மேம்படுத்த ரூ.20,000 கோடி மானியமாக வழங்க வேண்டும்.

மொத்தமாக 13 துறைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.6 லட்சத்து 84 ஆயிரத்து 500 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.