கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழக காவல் துறையில் 2 ஏடிஎஸ்பி-க்கள், 5 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 2 ஏடிஎஸ்பி-க்கள் (கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்), 5 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
Published on

தமிழக காவல் துறையில் 2 ஏடிஎஸ்பி-க்கள் (கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்), 5 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.

அதன் அடிப்படையில் 5 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதில், முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆா்.பொன்னரசு, விருதுநகா் மாவட்டம் திருச்சுழிக்கும், திருச்சுழி டிஎஸ்பி வி.ஜெகநாதன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் டிஎஸ்பி எம்.வசந்தராஜ் திருப்பூா் கொங்குநகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி எஸ்.சாா்லஸ் சாம் ராஜதுரை சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் எஸ்.முத்துவேல்பாண்டியன் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையின் தலைமையிட ஏடிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com