/

பட்டதாரிகள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்: ஏ.ஐ.சி.டி.இ தலைவர் டாக்டர் டி.ஜி.சீதாராமன்

பட்டம் பெறும் மாணவர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் என தொழில் நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் டாக்டர் டி.ஜி.சீதாராமன் தெரிவித்தார்.

News image
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தொழில் நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலவைர் டாக்டர் டி.ஜி. சீதாராமன்.
Updated On :24 நவம்பர் 2024, 11:04 am

DIN

பட்டம் பெறும் மாணவர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் என தொழில் நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் டாக்டர் டி.ஜி.சீதாராமன் தெரிவித்தார்.

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 33 வது பட்டமளிப்பு விழா உள் விளையாட்டு அரங்கில் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பானுமதி தம்பிதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் டி.ஜி. சீதாராமன் சிறப்புரை ஆற்றினார்.

அதில், இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாற்றம் பெற்று வருகிறது. ஒவ்வொரு மாணவர்களும் கல்வி மட்டுமின்றி தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு, ரொபேட்டிக், சாட். ஜி.பி.டி. உள்ளிட்ட 16 தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் வந்து கொண்டிருப்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய விண்வெளித்துறையில் சந்திராயன் திட்டத்தில் மகளிர் 30 சதவீதம் பேர் பணியாற்றி வருவது பாராட்டுக்குறியது. இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் 28.5 சதவிகிதமாக உள்ளது. ஆனால் தென்கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் 95 சதவிகித மாணவர்கள் உயர்க்கல்வி படித்து வருகின்றனர். 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெங்களூரு, ஒசூர் ஆகிய பகுதிகளில் நிறைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருக்கும் தொழிற்சாலைகளுடன் இணைந்து கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது தொழிற்சாலை பயிற்சி முடிந்து முழுத் திறமையுடன் வெளியில் வேண்டும். பாதுகாப்புத் துறை தளவாடங்களை இதுவரை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி தற்பொழுது ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தியா முன்னேறி வருகிறது.

சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கலை, அறிவியல் என பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவர்கள் படித்தாலும் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும். உலக அளவில் இந்தியாவில் 45 சதவிகித மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்தியாவில் தொழில்நுட்பத் துறை உச்சகட்டத்தில் உள்ளது. இதனை இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Story image

இந்த விழாவில் மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, அதியமான் கல்விஅறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, செயலாளர் லாசியா தம்பிதுரை, அறங்காவலர் நம்ரதா தம்பிதுரை, ஓலா நிறுவன முதன்மை செயல் அதிகாரி சிவக்குமார், அதியமான் கல்லூரி இயக்குனர் ஜி. ரங்கநாத் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன், வேளாங்கண்ணி குழுமத் தலைவர் கூத்தரசன் மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், தொழில் முனைவோர், பேராசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.