மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிச. 9 முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு

வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அப்பாவு தகவல்.

News image

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு - கோப்புப் படம்

Updated On :25 நவம்பர் 2024, 7:40 am

வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் குறித்து தலைவர் அப்பாவு செய்தியாளர்களை இன்று சந்தித்து அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, சட்டப்பேரவை விதி 26.1ன் கீழ், சட்டப்பேரவைக் கூட்டமானது வருகிற டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடவிருக்கிறது என்று அறிவித்தார்.

எத்தனை நாள்கள் நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அலுவல் ஆய்வுக் குழு கூடித்தான், பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என முடிவெடுக்கும் என்றும். இனி காலை 9.30 மணிக்கு அவை கூடும் என்று கடந்த தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

பொதுவாக, அலுவல் ஆய்வுக் குழு கூடித்தான், கூட்டத் தொடர் குறித்து முடிவெடுக்குமே தவிர, கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்று நான் தன்னிச்சையாக அறிவித்துவிட முடியாது, அலுவல் ஆய்வுக்குழுவில் அனைத்துக் கட்சியினரும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அப்பாவு கூறினார்.

பேரவைக் கூட்டத் தொடர் நேரலை குறித்து கேட்டதற்கு, சட்டப்பேரவை நடவடிக்கைகள் படிப்படியாக நேரலை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த கேள்விக்கு, செயற்கை நுண்ணறிவு துறையில், இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சட்டப்பேரவையும் காகிதமில்லாத சட்டப்பேரவையாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்து மாணவர்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.