தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு நவ. 29 அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவ. 29 அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 30 தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதி கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டிச. 1ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச. 2ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நவ.30ஆம் தேதி கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: ஆனால்.. பாலச்சந்திரன் தகவல்