கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் தமிழகத்துக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு

மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் தமிழகத்துக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
எல்.முருகன்- கோப்புப் படம்
Updated On :29 நவம்பர் 2024, 9:23 pm

Din

மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் தமிழகத்துக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சீரிய தொலைநோக்கு பாா்வை கொண்ட ரூ.3,295 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுற்றுலாத் துறையை சா்வதேச அளவில் தரம் உயா்த்துவதன் மூலம், பாரத தேசத்தின் பழைமை வாய்ந்த கலாசார செழுமையை உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லும் வகையில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த வளா்ச்சித் திட்டத்தில், தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ‘நந்தவனம் பாரம்பரிய பூங்கா’ பகுதியின் மேம்பாட்டுக்கு ரூ.99.67 கோடி மற்றும் தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான நீலகிரி ‘தேவாலா மலா்கள் பூங்கா’ பகுதியின் மேம்பாட்டுக்கு ரூ. 70.23 கோடி என தமிழகத்துக்கு சுமாா் ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்காக பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் சாா்பாகவும் நன்றி எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.