பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முழு விவரங்கள்...

News image

நிதியமைச்சகக் குழுவினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் - படம் - பிடிஐ

Updated On :1 பிப்ரவரி 2026, 2:39 pm IST

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், 83 நிமிடங்களுக்கு பட்ஜெட் அம்சங்கள் குறித்து உரையாற்றினார். இதில் பல்வேறு துறைகளுக்கான தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

துறை ரீதியாக பட்ஜெட் ஒதுக்கீடு விவரங்கள்

  • வேளாண் துறை - ரூ. 1.4 லட்சம் கோடி

  • அணுசக்தித் துறை - ரூ. 24,123.92 கோடி

  • ஆயுஷ் துறை - ரூ. 4408.93 கோடி

  • ரசாயனம் மற்றும் உரத் துறை - ரூ. 177061.47 கோடி

  • விமான போக்குவரத்துத் துறை - ரூ. 2102.87

  • நிலக்கரி துறை - ரூ. 3635.32 கோடி

  • வணிகம் மற்றும் தொழில் துறை - ரூ. 17843.90 கோடி

  • உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை - ரூ. 2.39 லட்சம் கோடி

  • தகவல் தொடர்பு அமைச்சகத் துறை - 1.02 கோடி

  • கல்வித் துறை - ரூ. 139289.48 கோடி

  • பாதுகாப்புத் துறை - ரூ. 784678.28 கோடி

  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை - ரூ. 21632.96 கோடி

  • சுற்றுச் சூழல், காடு, சூழல் மாற்ற நலத் துறை - ரூ. 3759.46 கோடி

  • நிதித்துறை - ரூ. 19,72509.48

  • வெளியுறவுத் துறை - ரூ. 22118.97 கோடி

  • புவி அறிவியல் துறை - ரூ. 3789.23 கோடி

  • கலாசாரத் துறை - ரூ. 3416.63 கோடி

  • பெருநிறுவன விவகாரங்கள் துறை - ரூ. 5561.86 கோடி

  • உள்துறை - ரூ. 255233.53 கோடி

  • நீர் வளத் துறை ரூ. 94807.84 கோடி

  • நீதித் துறை - ரூ. 5513.39 கோடி

  • சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை - ரூ. 24566.27 கோடி

  • நாடாளுமன்ற விவகாரங்கள் துறை - ரூ. 68.45 கோடி

  • ரயில்வே துறை - ரூ. 281377.32 கோடி

  • சாலை மற்றும் போக்குவரத்துத் துறை - ரூ. 309875.30 கோடி

  • ஊரக வளர்ச்சித் துறை - ரூ. 197023.14 கோடி

  • சுற்றுலா துறை - ரூ. 2438.40 கோடி

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை - ரூ. 28183.06 கோடி

  • ஜவுளித் துறை - ரூ. 5279.01 கோடி

  • இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - ரூ. 4479.88 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.