நாட்டில் மாநிலங்களுக்கான ரூ. 1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில்,
"2027 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, காலவரையறை நிர்ணயிக்கப்பட்ட பத்திரங்கள் மூலம் ரூ. 11.7 லட்சம் கோடி அரசு கடன் வாங்க உள்ளது.
வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கான வரி விலக்கு அளிக்கப்படும்.
16 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும்.
2026 -27 ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான ரூ. 1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும்.
வரும் ஏப்ரல் முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும்.
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Budget 2026: allocated Rs 1.4 lakh crores for states for FY2026-27
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்

கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK


