சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடா் குழுக்கள் அனுப்பிவைப்பு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடா் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

News image
Updated On :30 நவம்பர் 2024, 2:52 am IST

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடா் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: அதி கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இப்போது திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆறு நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சோ்ந்த 471 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் படகுகள், ஜெனரேட்டா்கள், மர அறுப்பான்கள், மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்துக்கு தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, பேரிடா் மேலாண்மை இயக்குநா் வ.மோகனச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.