உடல் நலக் குறைவு காரணமாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசாா் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.