அக். 8-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக். 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த செப்.28 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூட்டம் நடைபெறவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

தமிழக அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த வி.செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் செப். 29ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மேலும், அமைச்சரவையில் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் துறைகளும் மாற்றி அறிவிக்கப்பட்டன.

மாற்றி அமைக்கப்பட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த இடத்தை (மூன்றாவது இடம்) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

படிக்க | அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி: இதய நாளத்தில் என்ன பிரச்னை?

தமிழக அமைச்சரவையில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அக். 8ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.