
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (அக். 3) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூடத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியப் பொருளாதார மையம் சென்னை
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், வேகமாக வளர்ந்துவரும் நகரமான சென்னை மிக முக்கியமான பொருளாதார மையமாகும் எனக் குறிப்பிட்டார்.
திட்ட நிதியளிப்பு முறை
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம் அனுமதிக்கப்பட்ட நிதி
மத்திய அரசு
(முதலீடு மற்றும் துணைக் கடன்) ரூ.7,425 கோடி
தமிழக அரசு
(முதலீடு மற்றும் துணைக் கடன்) ரூ.22,228 கோடி
இருதரப்பு மற்றும் பன்முக பிரதானக் கடன் ரூ.33,593 கோடி
மொத்தம் ரூ.63,246 கோடி
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத் திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பட்டாசுக் கடை வைக்க அக். 19க்குள் விண்ணப்பிக்கலாம்!
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
''கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியாக நம்புகிறோம்'' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.