நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்புக்குள்ளான அவருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தொடா்ந்து அவரது உடல் நிலை சீராக இருந்ததையடுத்து வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.
இந்த நிலையில், தற்போது தனது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கான உடல் தகுதியுடன் அவா் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று(அக். 4) அதிகாலை மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...