தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி
அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ்
கோப்புப் படம்

அன்புமணி ராமதாஸ்
கோப்புப் படம்
தொழில் முதலீடுகள் தொடா்பான அரசின் புள்ளி விவரங்கள் மாறுபட்டதாக இருப்பதால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன; அதன் மூலம் 891 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படவிருப்பதுடன் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும் முதல்வா் தொடா்ந்து கூறி வந்தாா்.
கடந்த செப். 23-இல் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இதுவரை கையொப்பமிடப்பட்ட 891 தொழில் முதலீட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 535 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டன. அவற்றில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டதாகவும், 301 தொழில் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தாா். ஆனால், திமுக அரசு தற்போது வெளியிட்ட சாதனை அறிக்கையில் புள்ளிவிவரங்கள் முற்றிலும் மாறுபட்டதாகவுள்ளன.
தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈா்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈா்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...