பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆயுதபூஜை: தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்! முன்பதிவு தொடக்கம்

ஆயுதபூஜை: தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

சிறப்பு ரயில்

Published On :

சென்னை: ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி மற்றும் விழாக் கால கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி, மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

சென்னையிலிருந்து 8ஆம் தேதி புறப்பட்டு, தஞ்சை, தேவக்கோட்டை, கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

அதுபோல, கோவை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அக். 6ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று(அக் 5) மற்றும் அக் 6ம் தேதி ரெனிக்குண்டாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் பகல் 2.45க்கு புறப்பட்டு மாலை 5.45க்கு ரெனிக்குண்டா சென்றடையும். ரெனிக்குண்டாவில் மாலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 8.50க்கு சென்னை வந்து சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.