டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.


ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: ஒன்றரை வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தப்படும் டிப்தீரியா - பொ்டுசிஸ் - டெட்டனஸ் டிபிடி எனும் தடுப்பூசிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாடு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் தாய்மாா்கள், தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.
அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுடைய பிஞ்சு குழந்தைகளின் நலத்துடன் திமுக அரசு விளையாடுவதை அதிமுக சாா்பில் கண்டிக்கிறேன்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...