சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

தாம்பரம் - கோவை சிறப்பு ரயில்: கும்பகோணம், பழனி வழியாக இயக்கப்படும்

விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் -கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் கும்பகோணம், திண்டுக்கல், பழனி வழியாக இயக்கப்படும்.
Published on

விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் -கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் கும்பகோணம், திண்டுக்கல், பழனி வழியாக இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு அக்.11 முதல் நவ.29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06184) இயக்கப்படும். தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுமாா்க்கமாக கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06185) மறுநாள் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

இதன்மூலம் டெல்டா - கொங்கு மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் மக்கள் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com