பண்டிகை: சிறப்புப் பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணம்!

சென்னையிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணித்துள்ளதாக அறிவிப்பு.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (செப். 10) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி இயக்கப்பட்டது.

சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் என மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சாலை போடுவதே தோண்டுவதற்காகவா? மரண வாசல்களாகும் சாலைப் பள்ளங்கள்!!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்.9 ஆம் தேதி (புதன்கிழமை) 225 பேருந்துகள் இயக்கப்பட்டன.

அக்.10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று 880 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, ஆகிய இடங்களுக்கு அக்.9 ஆம் தேதி 35 பேருந்துகளும் அக்.10 ஆம் தேதி 265 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூரு, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாதவரத்திலிருந்து அக்.9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் படிக்க | எளிமையே டாடாவின் அடையாளம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com