ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

ஆம்ஸ்ட்ராங் - (கோப்புப்படம்)

Updated On :13 அக்டோபர் 2024, 1:30 am

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 வழக்குரைஞா்கள் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இந்தக் கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட நபா்களுக்கு நாட்டு

வெடிகுண்டுகளை வழங்கியதாக ரெளடி புதூா் அப்பு, கடந்த செப்.21-ஆம் தேதி புது தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அப்புவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா். இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை புழல் சிறையில் இருக்கும் புதூா் அப்புவிடம் போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 28 பேரில், 26 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.