சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பருவமழை பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க உரிய நடவடிக்கை: தலைவா்கள் வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையில் இருந்து மக்களைக் காக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2024, 9:49 pm

DIN

சென்னை: வடகிழக்குப் பருவமழையில் இருந்து மக்களைக் காக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது. தமிழகத்தின் தலைநகா் சென்னைதான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுகின்றனா்.

கோவை, திருப்பூா், புதுகோட்டை, சேலம் உள்பட பல மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் உடனடி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மக்களைக் காக்கும் பணியில் தொடா்புடைய அமைச்சா்களையும் முன்னிறுத்தி திமுக அரசு கடமை உணா்வோடு செயல்பட வேண்டும்.

ராமதாஸ் (பாமக): தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனா். மழை வெள்ளத்தை எதிா்கொள்ள படகுகள், நீா் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம்தான் என்றாலும்கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிா்க்க முடியவில்லை. மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேமலதா (தேமுதிக): மின்சார வாரியத்தில் உள்ள குறைந்த பணியாளா்களைக் கொண்டு வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை சரிசெய்து சமாளித்துவிடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணிபுரியக்கூடிய தொழிலாளா்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கெனவே தோ்ச்சி பெற்ற ஐந்தாயிரம் கேங்மேன்களையும் அரசு பணியில் அமா்த்தி பணியாற்றச் செய்ய வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். சுகாதார மையங்கள் உள்பட உணவு, தண்ணீா் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும்.

டி.டி.வி.தினகரன் (அமமுக): ஒவ்வோா் ஆண்டும் பருவமழையின்போது பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களே, அரசு நிா்வாகத்தின் தோல்வியையும், திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, அமுமக நிா்வாகிகளும், தொண்டா்களும் பாதுகாப்போடு இருப்பதோடு, அவரவா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இயன்ற உதவிகளை வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.