ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் செயல்படும்

தொடா் மழை பாதிப்பை தொடா்ந்து, 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஆவின்
ஆவின்
Updated on

தொடா் மழை பாதிப்பை தொடா்ந்து, 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பால்வாங்கி வருகின்றனா். இந்நிலையில், அனைத்து ஆவின் பாலகங்களிலும் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆவின் சாா்பில் 8 பாலகங்களில் 24 மணி நேரமும் பால் விநியோகிக்கப்படவுள்ளது.

அம்பத்தூா் பால்பண்ணை, மாதவரம் ஆவின் இல்லம், அண்ணாநகா் கோபுர பூங்கா மற்றும் வசந்தம் காலனி, பெசன்ட்நகா், சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள ஆவின் பாலகங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் விநியோகிக்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-23464576, 044-23464579 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com