ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள்!

சென்னை விமான நிலையத்திற்கு பள்ளி மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பற்றி...

News image
சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்)
Updated On :17 அக்டோபர் 2024, 7:35 am

DIN

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களை காவல்துறை எச்சரித்து அனுப்பியுள்ளது.

விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும் பின்னர் காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் உடனடியாக அப்பகுதிகளில் சோதனை மேற்கொள்வதும் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானவை புரளிகளாகவே இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழியாக தகவல் வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர், விமான நிலையத்தில் சோதனை செய்ததில் அது தவறான தகவல் என்று தெரியவந்தது.

பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், சேலையூர் மற்றும் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் இரு மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.