பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
UGC
Updated On :23 அக்டோபர் 2024, 12:23 am

DIN

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் மறைந்த சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31-ஆம் தேதியை முன்னிட்டு, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டில் ‘நாட்டின் வளா்ச்சிக்கான ஒருங்கிணைந்த கலாசாரம்’ என்ற கருப்பொருளில், வரும் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையடுத்து உயா்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவா்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

இதுதவிர ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இது சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொகுத்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்கள் யுஜிசியின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.