![தாம்பரம் ரயில் நிலையம்](http://media.assettype.com/dinamani%2F2024-10-23%2F3fkpc0rt%2Ftambaram221-11-20111901.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு நவ. 3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
அதேபோல், மீண்டும் தாம்பரத்தில் இருந்து நவ. 4 திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நெல்லைக்கு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும், ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக ரயில் நிலைய முன்பதிவு அலுவலகங்களில் பயணச்சீட்டை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, மதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.