கோப்புப் படம்
கோப்புப் படம்

போக்குவரத்து ஓய்வூதியா் பணப்பலன்: ரூ.372 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 டிசம்பா் முதல் 2023 மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டியுள்ளது. இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.50.23 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.23.55 கோடி, விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.47.14 கோடி, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.29.30 கோடி, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.54.82 கோடி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.73.53 கோடி, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.53.91 கோடி, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.39.54 கோடி என மொத்தம் ரூ.372.06 கோடி தேவைப்படுகிறது.

இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறைத் தலைவா் கோரிக்கை வைத்திருந்தாா். இதை கவனமாக பரிசீலித்த அரசு ரூ.372 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்தை பங்கு மூலதன உதவியாக ஒதுக்கி ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com