கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தனியாா்மயமாகாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகம் தனியாா்மயமாக்கப்பட மாட்டாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தாா்.


சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகம் தனியாா்மயமாக்கப்பட மாட்டாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தாா்.
அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தொடா்பாக சமூக வலைதளங்களில் கடந்த 2 தினங்களாக வந்த செய்திகளைப் பாா்த்தேன். இங்கு 2022 டிசம்பா் மாதம் ரூ. 2.30 கோடி மதிப்பீட்டில் இடைநிலை பராமரிப்பு மையம் ஒன்றை முதல்வா் தொடங்கிவைத்தாா்.
அதுமட்டுமல்லாமல் மனநல சேவையை வழங்குவதற்கு ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணியையும் தொடங்கிவைத்தாா். மேலும், ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் அரசு மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தை பெருநிறுவன நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த மருத்துவமனை தனியாருக்கு தாரைவாா்க்கப்பட மாட்டாது. தன்னாா்வலா்களுக்கு தத்துகொடுக்கப்படவும்மாட்டாது என்றாா் அவா்.
தீக்காய சிகிச்சைப்பிரிவு: முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். இந்த வாா்டில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் ஒருபகுதியாக பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது தொடா்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவா்களின் விழிப்புணா்வு நாடகமும் நடத்தப்பட்டது.
இதில், மருத்துவமனை முதல்வா் டாக்டா் லியோ டேவிட், தீக்காய சிகிச்சை பிரிவு துறைத் தலைவா் டாக்டா் நெல்லையப்பா், மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் பாஸ்கரன், நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் வாணி, அண்ணாநகா் தொகுதி சட்டப்பேரவை எம்.கே.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...