
சென்னை: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவை முறைப்படி தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார்டு 37வியாசர்பாடி கால்பந்து திடல், வார்டு 58 நேவல் மருத்துவமனை சாலை, வார்டு 67 - திரு விக நகர் கால்பந்து வளாகம், வார்டு 77 - கே.பி.பார்க் கால்பந்து வளாகம் உள்ளிட்ட 9 இடங்களை ஒப்படைக்க உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் மூலம் டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வசூலிக்கப்படும் 120 ரூபாய் கட்டணத்தில், 40 ரூபாய் மாநகராட்சிக்கு வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.