தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நாளைய தினம் தீபாவளி வருவதனால் புதுமணத் தம்பதிகள் மற்றும் இல்லங்களில் தீபாவளியைக் கொண்டாடப் பொதுமக்கள் இன்று பூக்களை, பழங்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் பூக்கடை சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
கனகாம்பரம்- 2000, குண்டு மல்லி-1150, முல்லை- 900, சாமந்தி-200, பட்டன் ரோஸ் -160, சம்பங்கி- 150, சாதி முல்லை- 640, வெற்றிலை- 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்துக் குறைவாக உள்ளதால் விலை உயர்வு அதிகமாகி வருகிறது.
சென்னையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி தாம்பரம் பூச்சந்தையில் மல்லி ஒரு கிலோ ரூ,2,500-க்கும், முல்லை ஒரு கிலோ ரூ.1,500-க்கும் விற்பனையாகிறது.