சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.2) முதல் செப்.7 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Updated On :2 செப்டம்பர் 2024, 2:10 am IST

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.2) முதல் செப்.7 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.2) முதல் செப்.7 வரை இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும்.

இதற்கிடையே, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.2,3-ஆகிய தேதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட வங்கக்கடலில் ஆக.31-ஆம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினம் அருகே கரையை கடந்தது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய  குமரிக்கடலும் , வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலும் செப்.2 முதல் 5-ஆம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.