ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கோவை: பங்குச் சந்தையில் நஷ்டம்? அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு!

கோவையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பற்றி...

News image
உள்படம்: தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன்.- Din
Updated On :3 செப்டம்பர் 2024, 6:41 am

DIN

கோவையில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்த இளைஞரின் உடல், அழுகிய நிலையில் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரது தற்கொலைக்கு பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டது காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்கொலைக்கு காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர், கோவை உப்பிளிபாளையம், சென்னிமலை கவுண்டர் லே-அவுட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தால் வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில், கோவை, சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்ததில், இறந்து மூன்று நாள்களான நிலையில், லேசாக அழுகிய நிலையில் மணிகண்டன் சடலமாக கிடந்துள்ளார்.

மேலும், காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மணிகண்டன் கடந்த சில மாதங்களாகவே யாருடனும், பேசாமலும், உணவு அருந்த மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருவதுமாக இருந்தது தெரியவந்தது.

இதனிடையே, மணிகண்டன் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருப்பதால் தற்கொலை செய்வதாக மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பங்கு சந்தை வர்த்தகத்தில் எற்பட்ட நஷ்டம் ஏற்பட்டு, இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.