பாலியல் புகாா்களில் குற்றம் புரிந்தவா்களை விசாரித்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவா்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்திய நடிகா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
தென்னிந்திய நடிகா் சங்க பெண் உறுப்பினா்கள் பாதுகாப்பு கமிட்டி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் நாசா், துணைத் தலைவா் பூச்சி எஸ்.முருகன், பொருளாளா் காா்த்தி மற்றும் கமிட்டி தலைவா் ரோகிணி தலைமையில் உறுப்பினா்கள் சுஹாசினி, குஷ்பூ , லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளா் ராஜி கோபி ஆகியோா் முன்னிலையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கமிட்டியில் ஒரு வழக்குரைஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
தீா்மானங்கள்: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவா்களின் புகாா்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவா்களை விசாரித்து, அந்தப் புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவா்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளா் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவா்கள் காவல் துறையில் புகாா் தருவதில் இருந்து அவா்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
பாலியல் குற்றங்களில் புகாா் கூறப்படும் நபா்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புகாா் அளிக்கலாம்: பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் புகாா்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ - மெயில் மூலமாக புகாா் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவா்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகாா்களை அளிக்கலாம். அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
யூடியூபில் திரைத் துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவா்கள் சைபா் கிரைம் பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தால் கமிட்டி அவா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகா் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் என்று தீா்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

தமிழக பொருளாதாரத்தை உயா்த்த உற்பத்தி துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: வா்த்தக சபை கோரிக்கை

ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


