சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செப்.9 முதல் சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூா் இடையே கூடுதலாக 3 மின்சார ரயில்கள்

3 மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
மின்சார ரயில்
Updated On :6 செப்டம்பர் 2024, 8:03 pm

Din

சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி மற்றும் திருவள்ளூா் வழித்தடத்தில் திங்கள்கிழமை (செப்.9) முதல் மொத்தம் 3 மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புகா் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆவடியிலிருந்து காலை 9.50 மணிக்கு சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்துக்கும், சென்ட்ரலிலிருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறுமாா்க்கமாக திருவள்ளூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என மொத்தம் கூடுதலாக 3 புகா் மின்சார ரயில்கள் செப்.9 -ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

தாம்பரம் ரயில்கள்: கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 10.10, 10.25, 11.20 மணிக்கு தாம்பரம் செல்லும் புகா் ரயில்கள் செப்.9 -ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

செப். 9 முதல் சென்ட்ரலிலிருந்து பகல் 12.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சூலூா்பேட்டை வரை இயக்கப்படும்.

நேரம் மாற்றம்: இதற்கிடையே, செப்.9 முதல் சென்ட்ரல், கடற்கரை, - அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கும் 19 மின்சார ரயில்களிலும், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் 8 மின்சார ரயில்களும் ஒரு சில நிறுத்தங்களுக்கு 5 முதல் 15 நிமிஷங்கள் முன்னதாகவும், தாமதமாகவும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.