மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘வீடுகளில் முதலீடு செய்ய உகந்த நகரம் சென்னை’

வீடுகளில் முதலீடு செய்ய மிக உகந்த நகரங்களில் சென்னையும் ஒன்று என சந்தை ஆலோசனை நிறுவனமான ‘மேஜிக்பிரிக்ஸ்’ தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 செப்டம்பர் 2024, 7:50 pm

Din

வீடுகளில் முதலீடு செய்ய மிக உகந்த நகரங்களில் சென்னையும் ஒன்று என சந்தை ஆலோசனை நிறுவனமான ‘மேஜிக்பிரிக்ஸ்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீடுகளில் இருந்து கிடைக்கும் சராசரி ஆண்டு வருவாய்க்கும் அவற்றின் விலைக்கும் இடையிலான விகிதாசாரம் இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்துவருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் 6.6-ஆக இருந்த அது, 2024-ஆம் ஆண்டில் 7.5-ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், வருவாயைவிட முதலீடு அதிகரித்துவருகிறது.

இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில், நாட்டிலேயே மிகக் குறைந்த வருவாயில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களில் வீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும் அவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கும் (வீடுகளின் விலை) இடையிலான விகிதம் ஐந்தாக உள்ளது. அதாவது, இந்த நகரங்களில் ஐந்து ரூ.5 லட்சத்துக்கு வீடு வாங்கினால் அதிலிருந்து கிடைக்கும் சராசரி ஆண்டு வருவாய் ரூ.1 லட்சமாக உள்ளது.

அதே நேரம், வீடுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மிகக் குறைந்த வருவாய் தரும் நகரங்களில் மும்பை பெருநகரப் பகுதியும் தில்லியும் இடம் பெற்றுள்ளன. அந்த நகரங்களில் வருவாய்க்கும் முதலீட்டுக்கும் இடையிலான விகிதாசாரம் முறையே 14.3 மற்றும் 10.1-ஆக உள்ளது. அந்த வகையில், ரூ.1 லட்சம் ஆண்டு வருவாய் பெற மும்பை பெருநகரப் பகுதியில் ரூ.14.3 லட்சமும் தில்லியில் ரூ.10.1 லட்சமும் முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.