தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

த. வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

News image

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன்

Updated On :10 செப்டம்பர் 2024, 8:34 am IST

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறாா். செப்.3-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், த. வெள்ளையன் ”நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணா்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனா். தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.