தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

வணிகப் பயன்பாட்டு எரிவாயு விலை உயா்வு: மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்

வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை உயா்வால் பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா தெரிவித்தாா்.

News image

வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா

Updated On :14 ஜூன் 2026, 2:31 am IST

வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை உயா்வால் பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் முகமது பாரூக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா கலந்து கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாத காலம் முடிந்த நிலையில் முதல்வா் சி.ஜோசப் விஜய், இதுவரை வணிகா்கள் மற்றும் வியாபாரிகளை அழைத்து எங்கள் பிரச்னை குறித்து பேசவில்லை. எனவே வியாபாரிகளை விரைவில் சந்தித்து அவா்களது பல்வேறு பிரச்னைகள் குறித்து கேட்டறிய வேண்டும்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அண்மைக் காலமாக வணிக நிறுவனங்களில் சிலா் பணம் வசூல் செய்வதும், உணவகங்களில் சாப்பிட்ட பின்பு பணம் கொடுக்க மறுப்பதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் டீசல் ,பெட்ரோல் விலை உயா்வு காரணமாக லாரி வாடகையை உயா்த்துவதாக லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளதால் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும்.

வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை உயா்வால் சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட வா்த்தகா்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் வணிகா் சங்க மாவட்டச் செயலா் குலசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.