யானை சாணத்தில் நாப்கின், முகக்கவச கழிவுகள்... குப்பைக் கிடங்குக்கு வேலி அமைக்க முடிவு!

கோயம்புத்தூரில் காட்டு யானைகளின் சாணத்தில் நாப்கின், முகக்கவச கழிவுகள் காணப்பட்டதால் மருதமலை வனப்பகுதிக்கு அருகிலுள்ள குப்பைக் கிடங்குக்கு வேலி அமைக்க அரசு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கோயம்புத்தூரில் காட்டு யானைகளின் சாணத்தில் நாப்கின், முகக்கவச கழிவுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து மருதமலை வனப்பகுதிக்கு அருகிலுள்ள குப்பைக் கிடங்குக்கு வேலி அமைக்க அரசு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கோயம்புத்தூரில் சோமயம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மருதமலை வனப்பகுதிக்கு அருகே இருக்கும் குப்பைக் கிடங்கில் அடிக்கடி உலா வரும் விலங்குகள் அங்கிருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, காட்டு யானைகளின் சாணத்தில் நாப்கின், முகக்கவச கழிவுகள் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, குப்பைக் கிடங்கைச் சுற்றி வேலி அமைக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பதி உத்தரவிட்டுள்ளார்.

கோப்புப் படம்
சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி!

இது தொடர்பாக, கோவை வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், “குப்பைக் கழிவுகளின் துர்நாற்றத்தால் கவரப்பட்டு இந்தப் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்குக்கு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. எனவே, யானைகள் நுழைவதைத் தடுக்க இங்கு சுற்றுச்சுவர் அல்லது மின்வேலி அமைப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

யானைகள் குப்பைக் கிடங்கில் கிடைக்கும் மீதமுள்ள உணவுகள் மற்றும் கழிவுகளை உண்பதால் அவற்றின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆரம்பத்தில், ஒரு தாய் யானை மற்றும் அதன் குட்டியும் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்து அருகிலுள்ள வீடுகளில் உணவுப் பொருள்களைத் தேடி வீடுகளைச் சேதப்படுத்தி வந்தன. தற்போது சோமயம்பளையம் மற்றும் மருதமலை அடிவாரத்தில் உள்ள தலியூர், கெம்பனூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் எட்டு யானைகள் உணவுப் பொருள்களைத் தேடி வீடுகளைக் குறிவைத்துத் தாக்குகின்றன” என்று தெரிவித்தார்.

கோப்புப் படம்
தமிழக பள்ளிகளில் வேலை நாள்கள் குறைப்பு!

சோமயம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரங்கராஜ் பேசுகையில், “இந்தக் குப்பைக் கிடங்கு பகுதி மொத்தமாக 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 3 டன் அளவிலான குப்பைகள் இங்கு சேமிக்கப்படுகின்றன. இங்கு, சுற்றுச்சுவர் அமைக்க 70 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் சுற்றுச்சுவர் அமைப்பதா அல்லது மின் வேலி அமைப்பதா என இன்னும் உறுதி செய்யவில்லை.

ஆனால், மின் வேலி அமைக்க வெறும் 20 லட்சம் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதியை எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதற்கானத் திட்டத்தை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com