ஓணம் பண்டிகை: சென்னையிலிருந்து கேரளத்துக்கு 3 சிறப்பு ரயில்கள்
சென்னையில் இருந்து மங்களூரு, கண்ணூா், கொச்சுவேலிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஓணம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை (செப்.13) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.15) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06163) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கண்ணூா் சென்றடையும். மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில்கள் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, ஷொரனூா், திரூா், கோழிக்கோடு, வடகரை வழியாக இயக்கப்படும்.
எழும்பூா் - கொச்சுவேலி: சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (செப்.13) பிற்கல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06160) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மறுமாா்க்கமாக இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.